ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (16:32 IST)

சிறையில் என்ன செய்கிறார் ராம்குமார்?

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் குற்றவாளி என கைது செய்யப்பட்டிருக்கும் ராம்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.


 
 
மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் ஓவ்வொரு நிகழ்வையும் அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாய் உள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராம்குமார் என்ன செய்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
 
புழல் சிறையில் 24 மணி நேரமும் காவலர்களின் கண்காணிப்பில் ஹாஸ்பிட்டல் பிளக் எனப்படும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு அவருக்கு பத்துக்கு எட்டு அளவுள்ள அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறையில் ராம்குமார் அமைதியாக எதையோ பறிகொடுத்தது போல் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராம்குமார் சிறைக்கு வந்த பிறகு மதியம் வரை அவரை சந்திக்க யாரும் வரவில்லை.
 
அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் சோதித்து வருகின்றனர். உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும், கழுத்தில் உள்ள காயங்கள் குணமாகியும் வருகின்றன என கூறப்படுகிறது.
 
ராம்குமாரின் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் இன்னமும் பிரிக்கப்படாத நிலையில் இன்று காலை அவரை பரிசோதித்த மருத்துவர் வலி ஏதேனும் இருக்கிறதா என கேட்டதற்கு இல்லை என ராம்குமார் கூறினார். அவர் எப்பொழுதும் அமைதியாக அதையோ பறிகொடுத்த மாதிரி இருப்பதாக கூறப்படுகிறது.