வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 4 ஏப்ரல் 2022 (08:42 IST)

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்: 800 விசைப்படகுகள் இயங்கவில்லை!

ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
 
 இலங்கை கடற்படையால் அவ்வப்போது ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன 
 
நேற்று கூட இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்கின்றனர்
 
இந்த போராட்டம் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பதும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது