செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:43 IST)

இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வரை சந்தித்த ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா உறுதி!

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலேவுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போதைய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக இருந்து வருகிறார். கொரோனா உறுதி செய்யபட்டதை அடுத்து ராம்தாஸ் அத்வாலே இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,