Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல்ஹாசனை கலாய்க்கிறாரா? வாழ்த்துகிறாரா? பாமக ராம்தாஸ் டுவீட்டால் ரசிகர்கள் குழப்பம்


sivalingam| Last Modified வெள்ளி, 7 ஜூலை 2017 (23:10 IST)
பாட்டாளி மக்கள் கட்சிக்கு சினிமாக்காரர்கள் என்றாலே பிடிக்காது என்பது தெரிந்ததே. ரஜினியின் 'பாபா' திரைப்படத்தை பாமகவினர் என்ன பாடு படுத்தினர் என்பது அனைவரும் தெரிந்ததே


 
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் ஜிஎஸ்டி வரி குறித்தும், மாநில அரசின் நிர்வாகம் குறித்தும் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் பீகாரை விட தமிழகம் ஊழலில் மிஞ்சிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து ஆளுங்கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது
 
இந்நிலையில் இதுகுறித்து தலைவர் ராம்தாஸ் தனது டுவிட்டரில், ''ஊழலில் பிகாரை மிஞ்சி விட்டது தமிழகம்: நடிகர் கமலஹாசன்- கமலஹாசனின் விஸ்வரூபத்தை பாருங்கள்! என்று கூறியுள்ளார். 
 
ராம்தாஸ் கமலை கிண்டல் செய்கிறாரா? அல்லது தமிழக அரசை விமர்சனம் செய்ததற்கு பாராட்டுகிறாரா? என்று தெரியாமல் கமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். கமல் ரசிகர் ஒருவர், 'சாதிவெறியில் தமிழகத்தை மிஞ்ச ஆளில்லை, அதுக்கு காரணம் ராமதாஸ்னு சொல்லலை, ஆனா அவர் காரணமில்லாம இருந்தா நல்லாருக்கும்ன்னு சொல்றோம் என்று கமெண்ட் பதிவு செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :