புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (14:02 IST)

மாடு அம்மானு மட்டுமல்ல..சின்னம்மான்னும் கத்தும் - ராமராஜன் அதிரடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும் என நடிகரும் அதிமுகவின் விசுவாசியுமான ராமராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜெ.வின் மறைவுக்குப் பின், அதிமுகவின் அடுத்த தலைமை யார்? கட்சியை வழி நடத்தப்போவது யார்.. பொதுச்செயலாளர் யார்?  என்ற கேள்வி மக்கள் மனதிலும், அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
 
சசிகலா அந்த பொறுப்பைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நடிகரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான ராமராஜனும், அதிமுகவை சசிகலா வழி நடத்திச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.