வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (16:22 IST)

கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ராமராஜன் & செந்தில் !

முன்னணி நடிகர்களான ராமராஜன் மற்றும் செந்தில் இருவரும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறியுள்ளனர்.

80களின் இறுதியில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் ராமராஜன். தயாரிப்பாளர்களின் கனவு நாயகனாக விளங்கிய ராமராஜன் 90 களின் பிற்பகுதியில் தனது மார்க்கெட்டை இழந்தார் . அதன் பின் அதிமுகவில் இணைந்து  ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்து அதனால்  எம்.பி.யாகவும் டெல்லியில் வலம்வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்குப் பின் ராமராஜன்தான் என பேச்சு எழ அதன் பிறகு ஜெயலலலிதா அவரை ஒதுக்க ஆரம்பித்தார்.

இதனால் சினிமாவும் கைவிட அரசியலும் கைவிட தனியாளாக ஆனார் ராமராஜன். தேர்தல் காலங்களில் பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப்பட்டார். இந்நிலையில் இப்போது அவர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியுள்ளார். இதற்கான காரணமாக தனக்கு விபத்து நடந்து கோமாவில் இருந்தபோது ஏசு கிறிஸ்துதான் தன்னைக் காப்பாற்றியதாக மேடையில் பிரசங்கம் செய்துள்ளார்.