1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (13:34 IST)

நீங்க மயில் கூடதான்..! நாங்கெல்லாம் சிட்டு குருவி சினேகிதன்! – ராமதாஸின் பறவை பாசம்!

பிரதமர் மோடி சமீபத்தில் மயிலுக்கு உணவளித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிட்டு குருவி பற்றி பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் பக்கமாக வந்த மயில் ஒன்றிற்கு அவர் தானியங்கள் இட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை தொடர்ந்து பலரும் பறவைகளோடு பிரதமர் கனிவாக நடந்து கொள்வது குறித்து சிலாகித்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தன் வீட்டிற்கு வந்த சிட்டுக்குருவி பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதில் அவர் “நேற்று என் வீட்டுக்கு வந்த விருந்தினரான தேன்சிட்டு ஒரு மணி நேரம் நான் அமரும் பகுதியில் உள்ள மின்விசிறி, மின் விளக்கு, சாளரம் உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து விளையாடி விட்டு எதுவுமே உண்ணாமல் சென்று விட்டது. ஒருவேளை அதற்கு மிகவும் பிடித்தமான தேனை தேடிச் சென்று விட்டதோ?” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து ராமதாஸும் பறவைகள் குறித்து பேசியுள்ள நிலையில் இது ட்ரெண்டாகியுள்ளது.