Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சட்டப்பேரவையை அல்வா விற்பனை நிலையமாக மாற்ற வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

Last Modified வெள்ளி, 12 ஜனவரி 2018 (12:45 IST)
தமிழக சட்டசபையின் பெயரை அல்வா விற்பனை நிலையம் என மாற்ற வேண்டும் என நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.
 
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தது.
 
இதனையடுத்து ஆளுநரின் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆளுனர் உரையை வழக்கமாக மாநில அரசு தயாரித்து வழங்கும். ஆனால் இந்த உரையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை பாராட்டியிருப்பதைப் பார்க்கையில், மத்திய அரசு தயாரித்த அறிக்கையோ என தோன்றுகிறது. மொத்தத்தில் ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா போன்று உள்ளது என கூறினார்.
 
ஆனால் மு.க.ஸ்டாலினின் மஸ்கோத் அல்வா விமர்சனத்துக்கு அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பா பதிலடி கொடுத்தார். அதில், ஆளுநர் உரை என்பது மஸ்கோத் அல்வா இல்லை, மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை கொண்ட பீமபுஷ்டி அல்வா என கூறினார்.
 
இதனையடுத்து இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா: மு.க. ஸ்டாலின், இல்லை... ஆளுனர் உரை பீமபுஷ்டி அல்வா: அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா. மேலும் ஆளுனர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தமிழக சட்டப்பேரவையின் பெயரை அல்வா விற்பனை நிலையம் என மாற்ற வேண்டும் என கிண்டலாக கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :