வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2016 (14:44 IST)

இதற்காகவே அவரை டிஸ்மிஸ் செய்யலாம்: ராம மோகன ராவ் மீது பாய்ந்த நளினி சிதம்பரம்

அரசு அதிகாரியான ராம மோகன ராவ் எப்படி அதிமுகவினருக்கு நன்றி கூறலாம். அவர் நாடகமாடுகிறார், இதற்காகவே அவரை டிஸ்மிஸ் செய்யலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவியும் வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் கூறியுள்ளார்.


 

 
ராம் மோகன் ராவ் வீடு, அவரின் மகன் வீடு மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம மோகன ராவ், அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அதிமுகவினர், மம்தா பேனர்ஜி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். 
 
ராம மோகன ராவின் இத்தகைய பேட்டிக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவியும் வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் கூறியதாவது:-
 
அரசு ஊழியரான ராம மோகன ராவ் எப்படி அதிமுகவினருக்கு நன்றி கூறலாம். அவர் நாடகமாடுகிறார், யாரோ ஒருவரின் தூண்டுதலில்தான் பேட்டி அளித்துள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும்போது, நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், எப்படி ஆவேசமாக பேச முடியும்.
 
அதிமுக தொண்டர்களை தூண்டி விட்ட பேச்சுக்காகவே அவரை டிஸ்மிஸ் செய்யலாம், என்று கூறினார்.