Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராம் மோகன் ராவின் பாஸ்வேர்டு - யார் அந்த லலிதா?


Murugan| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (16:27 IST)
வருமான வரித்துறையினரால் சோதனை செய்யப்பட்டு, தலைமைச் செயலாளர் பதவியை பறி கொடுத்து நிற்கும் ராம் மோகன் ராவ் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது.

 

 
சென்னை அண்ணாநகரில் உள்ள ராம் மோகன் ராவின் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கும் போதே, ஒரு சில அதிகாரிகள் தலைமைச் செயலகம் சென்று அவரின் அலுவலக அறையிலும் சோதனை நடத்தினர்.
 
அப்போது அவர் பயன்படுத்தும் லேப்டாப்பில் பல்வேறு முக்கிய தகவல்கள் இருக்கலாம் என சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதில் சோதனையிட முயன்றனர். ஆனால், அதில் பாஸ்வேர்டு கேட்டது. எனவே அங்கிருந்தவாறு, தொலைபேசி மூலம் அவரிடம் பாஸ்வேர்டை கேட்டனர்.
 
ஆனால், அது என் பெர்சனல்.. கூற முடியாது என்று சொல்லியிருக்கிறார் ராம். சோதனை என்று வந்த பின், பெர்சனல் என ஒன்றுமில்லை.. கூறுங்கள் என அதட்டவே, வேறு வழியில்லாமல் பாஸ்வேர்டை கூறியுள்ளார். ஒரு பெண்ணின் பெயரை கூறியுள்ளார் ராம் மோகன் ராவ்.. அது யார் எனக் கேட்டு விட்டு.. அவர்கள் அனைவரும் சிரித்தனராம். 
 
காரணம் ராம் மோகன் ராவ் கூறிய பெயர் லலிதா.. அவர் ராம் மோகன் ராவின் தோழியாம். லேப்டாப்பில் அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்த செல்பி புகைப்படங்கள் இருந்தனவாம். அவருக்கு சென்னையில் வீடு வாங்கி கொடுத்துள்ளாராம் ராம் மோகன் ராவ். இது அவரின் மனைவிக்கு தெரிந்து பஞ்சாயத்து ஆக, லலிதாவை நெல்லூருக்கு அனுப்பி விட்டாராம்.
 
நெல்லூரிலும் அவருக்கு வீடு எதாவது வாங்கித் தந்துள்ளாரா? அல்லது ரெய்டுக்கு பின் லலிதா வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டாரா என அதிகாரிகள் தற்போது அதையும் குடைய ஆரம்பித்து விட்டனராம்.


இதில் மேலும் படிக்கவும் :