Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சர்ச்சைகளில் சிக்கிய ராம் மோகன் ராவ் இன்று ஓய்வு...


Murugan| Last Updated: வியாழன், 28 செப்டம்பர் 2017 (09:33 IST)
முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று அவரது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

 

 
கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி, முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் இவருக்கும், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது.  
 
அதனால், அவரின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதில் கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராகப் பதவியேற்றார்.  
 
அந்நிலையில், அவருக்கு மீண்டும் உயர் பதவி அளிக்கப்பட்டு, தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டார்.
 
இந்நிலையில், அவர் இன்று அவரது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். 


இதில் மேலும் படிக்கவும் :