திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (12:28 IST)

அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் ? மாதிரி புகைப்படங்கள் இதோ...

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவில் எப்படி இருக்கும் என சில மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்பளித்த நிலையில் அங்கு கட்டப்படவுள்ள கோவிலின் மாதிரி புகைப்படங்களும் கோவில் கட்டம் குறித்த சில தகவல்களும் வெளியாகியுள்ளது. 
 
டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலை வடிவமைத்த சிபி சோம்புரா என்பவரின் மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படவுள்ளது. ராமர் கோயிலின் கருவறையில் ராம் லல்லா என்று சொல்லப்படக்கூடிய குழந்தை ராமரின் சிலை மூலவராக வைக்கப்பட உள்ளது. 
ராம் தர்பார், பிரம்மாணட நுழைவு மண்டபமும் கட்டப்படவுள்ளது. மார்பிள், கிரானைட், செங்கல், கருங்கல் போன்ற பலவித கற்களையும் கொண்டு வலுவான முறையில் கோவில் அமைய உள்ளது. தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களாக கோவில் அமையவுள்ளது. 
 
கோயில் 270 அடி நீளமும், 135 அடி அகலமும், 125 அடி உயரமும் கொண்டு அமைக்கப்படும். 2 மாடி கோவிலில் ஒவ்வொரு தளத்திலும் 106 தூண்கள் அமைக்கப்படும். கோயிலின் உட்புறத்தில் ராமரின் வரலாற்றை விளக்கும் வண்ண படஙள் வரையப்படும் என கூறப்பட்டுள்ளது.