திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth.K
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (12:02 IST)

5 வருடத்திற்கு முன்பு வந்தப்போ அவரை பார்க்க முடியவில்லை!- அகிலேஷ் யாதவ்வுடன் ரஜினிகாந்த்!

Rajnikanth
ஆன்மீக யாத்திரையாக இமயமலை வரை சென்ற ரஜினிகாந்த் தற்போது உத்தர பிரதேசத்தில் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.



தமிழ் சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஆனால் படம் வெளியாகும் முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றார்.

பின்னர் உத்தரபிரதேசம் சென்ற ரஜினிகாந்த் அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். பின்னர் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்வை தற்போது சந்தித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவர் இங்கு இல்லை. அதனால் இப்போது அவரை சந்தித்தேன்” என்று கூறியுள்ளார்.

இமயமலை சென்ற ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியல் தலைவர்களை சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K