திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 அக்டோபர் 2020 (13:19 IST)

அந்த அறிக்கைல இருக்கது உண்மைதான்; ஆனா எழுதுனது நான் இல்ல! – ரஜினிகாந்த் விளக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டதாக அறிக்கை ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் பரவி வந்த நிலையில் அதை தான் எழுதவில்லை என ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வேகமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் இன்னமும் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்புகளை வெளியிடாமல் இருப்பது அவரது தொண்டர்களை வருத்ததில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினி வெளியிட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் ரஜினி தனக்கு ஏற்கனவே இரண்டு முறை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கொரோனா உள்ள நிலையில் கட்சி தொடங்குதல், பொதுக்கூட்டம் என சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது தனக்கு மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் தன்னால் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை என கூறியிருப்பதாக உள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ட்விட்டரில் தற்போது விளக்கமளித்துள்ள நடிகர் ரஜினி “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள என் உடல்நிலை குறித்த தகவல் உண்மை. இதை பற்றி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார்.