1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (14:43 IST)

ராஜ்கிரண் சொல்ல சொல்ல கேட்காமல் திருமணம் செய்த வளர்ப்பு மகள்.. கண்ணீர் வீடியோ

munishraja
நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா என்பவர் தொலைக்காட்சியை நாடக நடிகர் முனீஸ் ராஜா என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இந்த திருமணத்திற்கு ராஜ்கிரன் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முனீஸ்ராஜாவை நம்ப வேண்டாம் என்றும் அவர் பணத்துக்காக எதையும் செய்வார் என்றும் கூறினார்.
 
ஆனால் பிரியா வளர்ப்பு தந்தை ராஜ்கிரன் சொன்னதை கேட்காமல் முனீஸ் ராஜாவை ப்ரியா திருமணம் செய்து கொண்டார்.  இந்த நிலையில் தற்போது கணவர் முனீஸ் ராஜாவை பிரிந்து தான் வாழ்வதாகவும் தனது கணவரை இரண்டு மாதத்திற்கு முன்பே பிரிந்து விட்டதாகவும் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
 எங்களது திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்றும் எனது தந்தை எவ்வளவோ கூறியும் அவரை நான் மனம் நோகடிக்க செய்துவிட்டேன் என்றும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த இக்கட்டான நேரத்திலும் என் தந்தை உதவி செய்ய முன்வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவரிடம் நான் மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த வீடியோவில் ப்ரியா தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran