Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு பக்கம் சினிமா ; மறு பக்கம் அரசியல் : ரஜினிகாந்த் திட்டம்?

Last Modified வியாழன், 10 மே 2018 (11:52 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் மாநாட்டை கோவையில் நடத்துவது குறித்து தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
நடிகர் ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற 'காலா' இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் குறித்த எந்த அறிவிப்பையும் தெரிவிக்காத ரஜினி, மீண்டும் நேரம் வரும்போது அரசியல் பேசுகிறேன் என்று கூறி தனது உரையை முடித்து கொண்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
 
இந்நிலையில் சமீபத்தில் தமிழகம் முழுவதும் நியமனம் செய்யப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் 32 மாவட்ட செயலாளர்களுடன் அவர் இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை செய்தார். அதன்பின், தனது போயஸ் கார்டன் இல்லத்திலும் அவர் நிர்வாகிகளோடு ஆலோசனை செய்தார்.
 
தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யும் பணி முடிந்துவிட்டதால் வெகுவிரைவில் ரஜினிகாந்த் குறிப்பிட்ட அந்த நேரம் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பின்னர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை கோவை மாவட்டத்தில் நடத்துவது பற்றி ரஜினி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், எம்.ஜி.ஆரைப் போல் ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் அரசியல் என பயணிக்க ரஜினி முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தனது அரசியல் அறிவிப்பை  மதுரையில் மாநாடு நடத்தி அறிவித்தனர். எனவே, நாம் கொங்கு நாட்டு பக்கம் மாநாடு நடத்துவோம் என ரஜினி முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :