செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (11:07 IST)

மத்திய மாநில அரசுகளை திட்டி தீர்த்த ரஜினி...

குழந்தைகளுக்கு நிம்மதி என்ற விழாவில் ரஜினி கலந்து கொண்டு பேசினார். அப்போது குழந்தைகள் அழகான பூக்கள் நாட்டினுடைய எதிர்காலம்.தெய்வீகம் நிரம்பியவர்கள் . நாம் தான் அவர்களின் முகத்தில் அழுகையை கொடுத்து விடுகிறோம் என்று பேசினார் .
மேலும் மேற்கத்திய நாடுகள் குழந்தைகளுக்கு  முக்கியத்துவம் தருவதில் பாதி அளவு கூட நம் நாட்டில் மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. குழந்தைகள் நலனுக்கான திட்டங்கள் உதவிகள் உடனடியாக செய்யப்பட வேண்டும். இன்னும் என்று மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். 
 
குழந்தைகளை பிச்சை எடுக்க செய்யும் மாபியாக்களுக்கு கொலை தண்டனைக்கு நிகரான தண்டனை தர  வேண்டும்.
 
இந்த அமைப்பிற்கு டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.