செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (15:18 IST)

தோல்வி அடைய விரும்பவில்லை: ரஜினிகாந்த் கூறியதாக நிர்வாகிகள்

பெயருக்கு கட்சி ஆரம்பித்து விட்டு தோல்வி அடைய விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக நிர்வாகிகள் ஊடகங்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இன்று காலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவது, வெற்றி வாய்ப்பு குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாகவும் இதனை அடுத்து விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது பெயருக்கு கட்சி தொடங்கி 10 முதல் 15 சதவீத வாக்குகளை வாங்கி தோல்வி அடைய விரும்பவில்லை என ரஜினிகாந்த் நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிவித்தார் 
 
தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் நிர்வாகிகளிடையே கூறியதாகவும் அவர் தெரிவித்தார். எனவே நமக்கு வெற்றி வாய்ப்பு உண்மையாகவே உள்ளது என்பது தெரிந்தால் மட்டுமே அரசியல் கட்சியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது