கமல்ஹாசனின் 'இந்து தீவிரவாதி' குறித்து ரஜினிகாந்த் கருத்து

Last Modified செவ்வாய், 14 மே 2019 (07:14 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சரம் செய்தபோது இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பேசியபோது, 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தான் நாதுராம் கோட்சே என்று பேசினார். அவருடைய இந்த பேச்சுக்கு இந்து ஆதரவாளர்களும், அரசியல் கட்சியினர்களும், ஒருசில திரையுலகினர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்திடமும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் இரண்டு நாள் பிரச்சாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்தார். இரு திராவிட கட்சிக்கு மாற்றுக்கட்சி என்று பலர் எண்ணியிருந்த நிலையில் அவருடைய இந்த பேச்சு அவர் மீதிருந்த நன்மதிப்பை திடீரென குறைத்துவிட்டதாக நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

kamalhasan
இந்த நிலையில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமல்ஹாசனின் பேச்சு குறித்து ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது 'இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை' என்று கூறினார்.இதில் மேலும் படிக்கவும் :