புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 டிசம்பர் 2024 (11:55 IST)

ரஜினியின் 74வது பிறந்தநாள்.. 300 கிலோ கருங்கல்லில் சிலை செய்து வழிபட்ட ரசிகர்!

Rajnikanth temple

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கருங்கல்லில் ரஜினிக்கு சிலை செய்து கோவில் அமைத்து ரசிகர் வழிபட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

 

 

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12, ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று ரஜினி ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்திப்பது வழக்கமாக உள்ளது. மேலும் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வது போன்ற நற்காரியங்களையும் செய்கின்றனர்.

 

தமிழ்நாட்டில் திரைப்பிரபலங்களுக்கு கோவில் கட்டுவதும் அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவமாக உள்ளது. அப்படியாக நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோயில் கட்டி, ரஜினிகாந்துக்கு சிலையே வைத்துள்ளார் ரஜினி ரசிகர் ஒருவர்.
 

 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் சிறுவயது முதலே ரஜினி ரசிகராக இருந்து வருகிறார். ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக திருமங்கலத்தில் கோயில் ஒன்றை கட்டி 300 கிலோ எடையிலான கருங்கல்லால் ரஜினிகாந்திற்கு சிலை அமைத்துள்ளார் கார்த்திக். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K