திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (15:31 IST)

கொரோனா நடவடிக்கை - அரசை பாராட்டிய ரஜினிகாந்த்!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். 
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.   
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 166 பேரில் 25 பேர் வெளிநாட்டவர்கள் என்றும், மீதமுள்ள 141 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரொனா இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசோடு மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என்று குறிப்பிட்டுள்ளார்.