வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (05:16 IST)

15 வருடங்களுக்கு முன்பே காப்பிரைட்: பாபா முத்திரை குறித்து ரஜினி தரப்பு பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில் அவர் தற்போது பாபா முத்திரையை அரசியலுக்கு பயன்படுத்துவார் என தெரிகிறது. தன்னுடைய ஆன்மீக அரசியலில் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றில் பாபாவின் அபான முத்திரை இடம்பெறும் என தெரிகிறது

இந்த நிலையில் பாபா போன்ற முத்திரையை தனது நிறுவனம் பயன்படுத்தி வருவதாக மும்பை நிறுவனம் ஒன்று ரஜினி மன்றத்திற்கு கடிதம் எழுதியதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால் கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த பாபா' படத்தின்போதே பாபா முத்திரை உள்பட அந்த படத்திற்காக பல விஷயங்கள் காப்பிரைட் பெறப்பட்டது. இப்போது பாபா முத்திரை குறித்து பிரச்சனை செய்ய வேண்டும் என்றால் 'பாபா' படத்தின் தயாரிப்பாளர் மட்டுமே செய்ய முடியும். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளரும் ரஜினிதான் என்பதால் ரஜினிகாந்த் பாபா முத்திரையை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை' என்றே ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறுகின்றனர்.

15 வருடங்களுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக தங்கள் தலைவர் பாபா முத்திரையை காப்புரிமை பெற்றுவிட்டதாக ரஜினி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.