திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2019 (18:59 IST)

ரஜினி அரசியலில் மாட்டிக் கொள்ள மாட்டார் ... காங்கிரஸ் தலைவர் ’பளிச் ’பேட்டி

ஆன்மிகத்தில் நாட்டமுடைய ரஜினி போன்றோர் அரசியலுக்கு வர மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இரு வருடங்களுக்கு முன்னாள் தனது அரசியல் வருகையை அறிவித்தார்.
 
இந்நிலையில் அவர் அரசியலுக்கு வருவது பற்றி என்ன நினைக்கிறாரோ இல்லையோ ஆனால் இங்குள்ள அத்துனை கட்சிகளும் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தான் பேசுகின்றனர்.
 
இந்நிலையில் இன்று, தமிழக காங்கிரஸ் கே.எஸ். அழகிரி ரஜினியைப் பற்றி கூறியுள்ளதாவது :
 
அறிவுப்பூர்வமான ரஜினி தவற்றில் மாட்டிக் கொள்ள மாட்டார். கட்சியும் தொடங்க மாட்டார். முக்கியமாக அவர் பாஜக கட்சியிலும்  சேர மாட்டார்.
 
ஒருவேளை ரஜினி கட்சி தொடங்கினாலோ பாஜகவின் சேர்ந்தாலோ தமிழகத்திற்கு அதனால் எந்த நன்மையும் இல்லை.ஆன்மிகத்தில் நாட்டமுடைய ரஜினி போன்றோர் அரசியலுக்கு வர மாட்டார்கள்  இவ்வாறு தெரிவித்தார்.