திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (07:00 IST)

'பேட்ட' படம் பார்க்க சென்ற ரஜினி ரசிகர் அடித்து கொலை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரஜினி ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்த படத்தை பார்த்து ரசித்து வருவதால் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

இந்த நிலையில் உடுமலைபேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் மணிகண்டபிரபு என்ற ரஜினி ரசிகர் கடந்த 12ஆம் தேதி 'பேட்ட' படம் பார்க்க சென்றுள்ளார். திரையரங்கில் மணிகண்டபிரபு புகை பிடித்ததாகவும், அதனை தட்டிக்கேட்ட ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அடிதடி சண்டை ஏற்பட்டதாகவும், இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெர்கிறது. மேலும் கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் தற்போது சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்ததால் தற்போது இந்த் வழக்கு கொலை வழக்காக மாறியுள்ளது. மணிகண்டனை அடித்தது யார்? என்பது குறித்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார், திருமூர்த்தி என்ற கொலையாளியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

ரஜினி ஸ்டைலில் புகை பிடிக்க முயற்சித்த ரசிகர் ஒருவர் பரிதாபமாக பலியானதும், அவரை கொலை செய்தவர் இனி வாழ்வின் பெரும்பகுதியை சிறையில் கழிக்க வேண்டிய நிலையும் ஒரு திரைப்படத்தால் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது