ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 நவம்பர் 2018 (13:16 IST)

சினிமாகாரங்கனா கேவலமா? எடப்பாடியாரை சீண்டிய ரஜினிகாந்த்

சினிமாகாரர்கள் குறித்த விமர்சனங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக பதிலளித்திருக்கிறார்.
சர்கார் பட சர்ச்சையின் போது அதிமுகவினர் பேனர்களை கிழித்து அட்டூழியம் செய்தனர். பின்னர் இவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்த படக்குழுவினர் சர்ச்சைக் காட்சிகளை நீக்கினர்.
 
சமீபத்தில் அதிமுகவினர் சர்கார் பேனரை கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டது குறித்து முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தலைவனின் திட்டங்களை விமர்சனம் செய்தால் அவனது தொண்டர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
 
சினிமாகாரர்களுக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை? ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். 
 
சினிமாகாரர்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள், காஸ்ட்லி காரில் செல்கிறார்கள். இவர்களெல்லாம் இலவசங்களைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என கூறினார்.
 
இந்நிலையில் இதற்கு பதிலளித்திருக்கும் ரஜினிகாந்த், சினிமாவில் சென்ஸிடிவான விஷயங்களை பார்த்து கையாள வேண்டும். சினிமா காரங்கனா எல்லாருக்கும் என்ன பிரச்சன? அவுங்க சம்பாதிக்கிறாங்க.. அதுக்கான டேக்ஸ் கட்டுறாங்க. இதுல அவுங்களுக்கு என்ன போச்சு.. எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்காங்க என எடப்பாடியாரின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காட்டமாக பேசினார்.