திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (21:00 IST)

மே மாதம் தொடங்குகிறது ரஜினி - ரஞ்சித் கூட்டணி

கபாலியை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ஒருபடம் நடிக்கிறார். மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
பணம், புகழ், நடிப்பு, சினிமா அனைத்தையும்விட ஆன்மீகத்தையே அதிகம் விரும்பும் ரஜினி தொடர்ந்து பணம், புகழ் தரும் நடிப்பில்தான் கவனம் செலுத்தி வருகிறார். 2.0 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே அவரது அடுத்தப் படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டன.
 
ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்கிறார். (படத்தின் லாபம் குடும்பத்துக்குள்ளேயே இருக்குமே) இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மே மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்கிறார்கள்.