ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (11:01 IST)

நீட் தேர்வுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை... ரஜேந்திரபாலாஜி

நீட் தேர்வுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறிவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு தற்போது கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை என அவர் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 
 
மேலும் தமிழகத்தில் தற்போது உள்ள திமுக ஆட்சியில் பேசுவது எல்லாம் பொய் என்றும், செய்வதெல்லாம் நாடகம் என்றும், நடப்பதெல்லாம் நடிக்கும் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.  
 
சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கினார் என்பதும் முதல் கையெழுத்தாக அவர் தனது கையெழுத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva