Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜல்லிக்கட்டுக்கு பாகுபலி இயக்குநர் ஆதரவு


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 10 ஜனவரி 2017 (20:19 IST)
ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகளை காக்க வேண்டும் என்று பிரபல இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

 

 
கடந்த இரண்டு ஆண்டுகளாக தடையில் இருக்கும் ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. பிரபல அரசியல் தலைவர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
 
சினிமா பிரபலங்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவது பிரபலம அடைந்த இயக்குநர் ராஜமௌலி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகளை காக்க வேண்டும். கலாச்சாரத்தை காக்கவும், அதே சமயம் காளைகள் துன்புறுத்தப்படாமல் இருக்கவும் நல்வழி செய்ய வேண்டும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :