வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 மே 2020 (16:12 IST)

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மதுரை, தேனி, தென்காசி, விருது நகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

நெல்லை, சேலம், கரூர், தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் 40 டிகிடி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேசமயம்,  தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், வெயிலின் தாக்கம் 37 டிகிரி வரை இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்