வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:44 IST)

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் கனமழை பெய்தது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழையும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டம் காணப்படும் என்றும் லேசான மழை ஒரு சில நேரங்களில் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது