ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2023 (15:53 IST)

அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை: 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
மேலும் அக்டோபர் மூன்றாவது வாரம்  வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் இப்பொழுது மழை பெய்ய ஆரம்பித்து உள்ளது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில்  அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன்  மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது.
 
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளவும்
 
Edited by Siva