1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:56 IST)

மக்களுக்கு ரூ.5000 நிவாரணம் - முதல்வர் ரங்கசாமி வழங்கினார்!

புதுச்சேரியில் ரூ.5000 மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். 

 
புதுச்சேரியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. அதன்படி இன்று மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். 
 
புதுச்சேரியில் சிவப்பு அட்டைக்கு ரூ.5,000, மஞ்சள் அட்டைக்கு ரூ.4,500 மழை நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 1,85,000 சிவப்பு அட்டைதாரர்களும் 1,62,000 மஞ்சள் அட்டைதாரர்களும் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.