செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (08:19 IST)

சென்னை மக்களை குளிர்வித்து வரும் மழை

நவம்பர் முதல் வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வெதர்மேன் கூறியிருந்த நிலையில் அதன் டிரைலராக இன்று சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
வழக்கமாக அக்டோபர் 15 முதல் 20 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்க வேண்டும். கடந்த 26 ஆம் தேதி மழை பெய்யும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அப்பொழுதும் மழை வரவில்லை.
 
வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் இல்லாத காரணத்தால், சில நாட்கள் தாமதமாக நவம்பர் முதல் வாரத்தில் துவங்குவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என ஆய்வு மையம் கூறியிருந்தது.
 
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.
 
இந்த திடீர் மழையால் மக்கள் சந்தோஷப்பட்டாலும், ஆபிஸுக்கு செல்ல முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.