1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (07:53 IST)

குளிர்ந்தது சென்னை: 2வது நாளாக கனமழை!

Rain chennai
சென்னையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததை அடுத்து சென்னை முழுவதும் குளிர்ச்சியான தட்ப வெட்ப நிலை ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு இரண்டாவது நாளாக கனமழை பெய்தது என்பதும் சென்னை நகர் முழுவதும் இதனால் குளிர்ச்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். தற்போது இந்த அவதியில் இருந்து நீங்கும் வகையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து சென்னையில் மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் பருவமழை தொடங்கி விட்ட காரணத்தினால் இனி படிப்படியாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான தற்போது நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது