வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 8 மே 2024 (07:55 IST)

சென்னையில் அதிகாலையில் மிதமான மழை.. அக்னி நட்சத்திரம் நேரத்தில் கிடைத்த குளிர்ச்சி..!

சென்னையில் அதிகாலையில் மிதமான மழை பெய்ததை அடுத்து அக்னி நட்சத்திர வெயில் காரணமாக வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்த பொது மக்களுக்கு சற்று மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அதிகாலை முதலே குளிர்ச்சியான தட்பவெப்ப சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அது மட்டும் இன்றி விழுப்புரம் மாவட்டத்தின்  காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
 
Edited by Siva