ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (15:28 IST)

இன்னும் சிலமணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Rain
இன்னும் சில மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்னும் சில மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கோயம்பத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் 
 
Edited by Mahendran