1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 மார்ச் 2025 (16:40 IST)

ரயில்வே தேர்வு ரத்து.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

Selvaperundagai
ரயில்வே தேர்வு ரத்து.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
 
இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரயில்வே துறை
 
நாட்டில் இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏறத்தாழ 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பதிவுசெய்தார். வினாத்தாள் கசிவிற்கு பிறகு, தற்போது உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
 
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்ததிருந்த போதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரயில்வே துறை.
 
எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது ஒன்றிய ரயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனவுளைச்சலுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்அவர்கள், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
 
Edited by Mahendran