வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (13:45 IST)

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

ரயில் நிலையம் மற்றும் ரயில் கிராஸிங் அருகே உள்ள 39 மது கடைகளை அகற்ற வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ரயில்வே துறை கடிதம் எழுதி உள்ளது.

சென்னை கோட்டத்தில் புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் இருந்து 10 முதல் 200 மீட்டர் வரை அமைந்துள்ள 39 டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள மது கடைகள் மற்றும் மது பார்களில் மது அருந்திவிட்டு தண்டவாளத்தில் படுத்துக் கிடக்கின்றனர். இது உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே கிராசிங், ரயில் நிலையங்கள் அருகிலுள்ள மது கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் மது கடைகள் செயல்படத் தடை உள்ளது போல், ரயில் நிலையங்களுக்கு அருகில் மது கடைகள் செயல்படுவதற்கு தடை விதித்தால் தான் குற்றச்சம்பவங்கள் குறையும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva