Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கலக்கத்தில் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்கள்: வீடுகளில் ரெய்டு நடக்க வாய்ப்பு!

கலக்கத்தில் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்கள்: வீடுகளில் ரெய்டு நடக்க வாய்ப்பு!


Caston| Last Modified திங்கள், 13 பிப்ரவரி 2017 (10:07 IST)
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற சசிகலாவுக்கும், ஒ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடைபெற்று வருகிறது. இதில் சசி தரப்பிடம் சிக்கியிருக்கும் எம்எல்ஏக்கள் நிலமை பரிதாபமாக உள்ளது.

 
 
ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியிருப்பதால் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏக்கள் வெளியே இருந்தால் அவர்கள் ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிடுவார்கள் என்ற நிலமை உள்ளது. இதனால் அவர்களை சுதந்திரமாக விடாமல் ரிசார்ட்டில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் சசிகலா.
 
இந்நிலையில் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்களுக்கு இன்று மாலை வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. சொகுசு விடுதியை விட்டு வெளியே வர வேண்டும் இல்லையென்றால் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் ரெய்டு நடக்கும் என தகவல்கள் பரவி வருகிறது. இதனால் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்கள் கலக்கத்தில் உள்ளதாக பேசப்படுகிறது.
 
சசிகலா தரப்பிடம் சிக்கியுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வெளியே வர முடியாமலும், தங்களிடம் இருப்பதை தக்க வைத்துக்கொள்ள முடியாமலும் பரிதாப நிலையில் உள்ளனர். ஆனால் சசிகலா தரப்பு இன்னும் இரண்டு நாட்கள் எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கேப் கிடைத்தால் தப்பித்துவிடலாம் என்ற நிலையில் எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :