1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 டிசம்பர் 2017 (13:29 IST)

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மாற்றம் - விஷால் விவகாரம் எதிரொலி?

ஆர்.கே.நகர் தேர்தல் தேர்தல் அதிகாரிக்கு வேலுச்சாமிக்கு பதில் பிரவீன் நாயர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


 
நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் ஏற்பட்ட குழப்பங்கள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. முக்கியமாக திமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
இந்நிலையில், வேலுச்சாமிக்கு பதிலாக பிரவீன் நாயர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரவீன் நாயர் சென்னை மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் வகிப்பவர் என்பதும், கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, பிரவீன் நாயர்தான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.