செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (11:49 IST)

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

School
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதிக்குள் காலாண்டு தேர்வு முடியும் வகையில் அட்டவணை உள்ளது.

இந்த நிலையில், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஒரு வாரம் காலாண்டு தேர்வு விடுமுறை கிடைக்கும். ஆனால், இந்த முறை ஐந்து நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறை கிடைக்கிறது.

இதன்படி, செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது. . இதில், செப்டம்பர் 29 ஞாயிறு என்பதும், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை நாளாக இருப்பதாலும், செப்டம்பர் 28, 30, அக்டோபர் 1 ஆகிய 3 நாட்களே உண்மையான காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 3 ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva