1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2017 (12:42 IST)

பாவனாவை கடத்தியவர் கீர்த்தி சுரேஷின் அம்மாவையும் கடத்த முயன்றார் - அதிர்ச்சி செய்தி

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய அதே கார் ஒட்டுனர்தான், நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மாவையும் சில ஆண்டுகளுக்கு முன் கடத்த முயன்றார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.


 

 
சமீபத்தில் நடிகை பாவனாவை நள்ளிரவில் ஒரு கும்பல் கடத்திச் சென்று, சுமார் 2 மணி நேரம் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது. அதன் பின் அந்த கும்பல் வேறொரு காரில் தப்பிச் சென்றது.
 
இதுகுறித்த விசாரணையில், பாவனாவின் முன்னாள் கார் ஒட்டுனர் பல்சர் சுனி இதில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதுவரை மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், முக்கிய குற்றவாளி பல்சர் சுனி இன்னும் கைது செய்யப்படவில்லை.
 
இந்நிலையில், ஒரு பிரபல இணையதளத்திற்கு பேட்டியளித்த நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ், சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே பல்சர் சுனி தனது மனைவியும், கீர்த்தியின் தாயுமான மேனகாவை கடத்த முயன்றதாகவும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.
 
கீர்த்தியின் தாய் மேனகா, தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கிறார்.
 
பல்சர் சுனி பல நடிகைகளிடம் கார் ஒட்டுனராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..