வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (13:43 IST)

ரோட்டில் நின்று செல்பி எடுத்தால் கைது - அதிரடி உத்தரவு !

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு செயல்படுத்தப்படும் நிலையில் செல்பி எடுப்பவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் சமூக இடைவெளி பேணுவது அவசியம் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு செயல்பாட்டில் இருந்தபோது அரசின் அறிவுறுத்தலை மதிக்காமல் வெளியே சென்று பலர் சாலைகளில் வீடியோ எடுத்து டிக்டாக் செய்து கொண்டிருந்தனர்.

மூடப்படும் சாலைகளில் செல்பி எடுக்க திரிபவர்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளதை உணர்ந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சமயத்தில் யாராவது முக்கிய சாலைகளில் நின்று செல்பி எடுத்தல், டிக்டாக் செய்தல் போன்ற வேலைகளை செய்தால் அவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கண்காணிப்பாளரின் இந்த உத்தரவை தமிழகமெங்கும் செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.