வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 15 செப்டம்பர் 2014 (14:54 IST)

சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய தேவையில்லை: புதுச்சேரி அரசு

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய தேவையில்லை என புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின்போது, சங்கரராமன் மனைவி உள்பட பலர் பிறழ் சாட்சியம் அளித்திருந்தனர். 9 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில், குற்றம்சாற்றப்பட்ட ஜெயேந்திரர் உள்ளிட்ட 24 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யலாமா? என்பது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியிடம் புதுச்சேரி அரசு கருத்து கேட்டிருந்தது. அதற்கு, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முகாந்திரம் இல்லை என்று முகுல் ரோத்தகி பதில் அளித்திருந்தார்.
 
இதையடுத்து, காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வதில்லை என்ற முடிவை புதுச்சேரி அரசு எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பாக ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு சட்டத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.