செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 மே 2020 (19:34 IST)

புதுச்சேரியில் மதுபான கடை திறப்பு நேரத்தில் திடீர் மாற்றம்

புதுச்சேரியில் மதுபான கடை திறப்பு நேரத்தில் திடீர் மாற்றம்
புதுச்சேரியில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க இருப்பதாகவும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் மதுக்கடைகள் தரப்பை இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன
 
இந்த நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் அதிக நேரம் கடைகள் திறப்பதற்கு புதுவை எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன
 
இதனை அடுத்து தற்போது புதுவையில் மதுபான கடை திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனை அடுத்து புதுவையில் உள்ள சில்லறை மதுபான கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை 11 மணி நேரம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொத்த மதுபான கடைகள் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் மதுபான கடைகள் திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்