1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 23 ஜூன் 2022 (11:15 IST)

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மலர்கள் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்!

pudhuvai schools
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மலர்கள் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்!
தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன 
 
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக இயங்காத நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் வழக்கம்போல இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதை அடுத்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் போது ஆசிரியர்கள் அவர்களை மலர் தூவி வரவேற்றனர். மேலும் மாணவர்களுக்கு பலூன்கள் உள்ளிட்ட பொருள்களை கொடுத்தும் சில ஆசிரியர்கள் வரவேற்பு தந்தன.ர் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன