Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:05 IST)
மக்கள் வாக்களித்தது அ.தி.மு.க.விற்கு..... பொன்னையன் பேட்டி
தமிழக மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கும், அதிமுக ஆட்சிக்கும், மக்கள் நலக கொள்கைக்காகவும்தான் வாக்களித்தார்கள் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக முதல்வராக தெர்வு செய்துள்ளனர். முதல்வராக பதவியேற்க சசிகலாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.
சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முதல்வரை தேர்வு செய்யலாம். முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர், பதவிப் பிரமாணம் செய்து கொண்ட 6 மாதத்துக்குள் சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என்பதுதான் சட்டம்.
மக்கள் வாக்களித்தது இரட்டை இலை சின்னத்துக்கும், அதிமுக ஆட்சிக்கும், மக்கள் நல கொள்கைகளுக்கும்தான், என்றார்.