பொதுத்தேர்வு உண்மையில் குழந்தைகளை பாதிக்குமா?
தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மாணவர்களிடம் இருந்து இதுவரை எந்தவித ரியாக்சனும் இல்லாத நிலையில் அரசியல் கட்சியினர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மத்திய அரசோ தமிழக அரசோ எந்த அறிவிப்பும் வெளியிட்டாலும் அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தையும் விட்டுவைக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களை உளவியல் ரீதியாக தாக்கியதாக கருதப்படும் என்றும், சிறிய வயதிலேயே பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டிய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்த கூடாது என்றும், அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்
கடந்த 80களிலும், 90களிலும் இருந்த குழந்தைகள் போல் 21ஆம் நூற்றாண்டு குழந்தைகள் இல்லை என்றும் ஐந்து வயதிலேயே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும், பத்து வயதிலேயே டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு கோடிக்கணக்கில் பரிசுகளை வெல்லும் அளவிற்கு குழந்தைகளிடம் தற்போது திறமை இருக்கிறது என்றும், சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்
மேலும் 10 வயதிலேயே இன்டர் நெட்டில் புகுந்து விளையாடும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை எதிர்கொள்வது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என்றும், தற்கால குழந்தைகள் புத்திசாலிகள் என்பதால் பொதுத்தேர்வை மிக எளிதில் கையாளுவார்கள் என்று கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
மேலும் பொதுத்தேர்வு வேண்டாம் என்று அரசியல் கட்சிகள் கூறுவதில் அர்த்தமில்லை என்றும் பொதுத்தேர்வுக்கும் சாதாரண தேர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை அவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தாலும் சாதாரன தேர்வில் குறைவான மதிப்பெண்க்ளை ஒரு மாணவன் எடுத்தாலும் தோல்வி தான் நிலை இருக்கும் போது இரண்டும் என்ன வித்தியாசத்தை அவர்கள் பார்க்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்