வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (10:46 IST)

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் தடுக்கலாம் - தமிழக அரசு புதிய திருத்தம்!

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு அரசு. 

 
ஆம், டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்களை பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பிக்காமல் எந்த டாஸ்மாக் கடைகளும் திறக்க அனுமதிக்ககூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
மேலும் மாவட்ட ஆட்சியர்கள் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மது விலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டத்திருத்தம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திருத்தம் இனி மேல் புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.