செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:04 IST)

மதுரை மேம்பால விபத்து: அமைச்சர் பிடிஆர் நேரில் ஆய்வு

மதுரையில் உள்ள நத்தம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்தபோது தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்களும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார் 
 
மேலும் பாலத்தை தூக்கி வைக்கும் மிகப்பெரிய பணியில் 2 ஊழியர்கள் மட்டுமே ஈடுபட்டது கேள்வி எழுப்புகிறது என்றும் அதிகாரிகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் பாலத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பிடிஆர் பேட்டி அளித்தார்.
 
மேலும் தகுந்த பயிற்சி அளிக் காமல் ஊழியர்களை ஒப்பந்ததாரர்கள் பணியில் வைத்ததாகவும் இதுவே விபத்திற்கான காரணம் என்றும் இது குறித்து விசாரணை செய்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்